ஆந்திராவின் தலைநகரமான விசாகப்பட்டினம் : முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு..!!

ஆந்திராவின் தலைநகரமாக விசாகப்பட்டினத்தை அறிவித்தார் அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி. விசாகப்பட்டினம் தலைநகரமாக அறிவிக்கப்பட்டதன் மூலம் 3 தலைநகரம் திட்டம் கைவிடப்பட்டது. விரைவில் அரசு அலுவல் நடவடிக்கைகள் அனைத்தும் விசாகப்பட்டினத்திற்கு மாற்றப்படும் என முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி  அறிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் 2014 ஜூன் மாதம் ஆந்திரா, தெலுங்கானா என இரண்டாக பிரிக்கப்பட்டது.