தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தல அஜித். இவர் தற்போது துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை எச். வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். அதன் பிறகு துணிவு திரைப்படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படம் ஜனவரி 11-ம் தேதி ரிலீஸ் ஆகும் நிலையில், துணிவு திரைப்படத்திலிருந்து சில்லா சில்லா, காசேதான் கடவுளடா, கேங்ஸ்டா போன்ற பாடல்கள் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் நடிகர் அஜித் மிகவும் சாதாரணமான முறையில் ஆட்டோவில் பயணம் செய்துள்ளார். அவர் ஆட்டோவில் பயணம் செய்யும்போது மாஸ்க் அணிந்திருக்கிறார். இது தொடர்பான புகைப்படத்தை அஜித் ரசிகர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, ஆட்டோக்குள்ள யாரு பாரு, மேன் ஆஃப் சிம்ப்லிசிட்டி என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by @imsathyadev