திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலத்தில் சந்தான ராமர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றுள்ளது. இதனை முன்னிட்டு சீதா லட்சுமணன், ஆஞ்சநேயர், விஷ்வக்ஸேனர், சந்தான ராமர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அதேபோல் திருவோணமங்கலம் ஞானபுரிலுள்ள சங்கடகர மங்கள மாருதி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றுள்ளது. இதனை முன்னிட்டு 33 அடி உயர ஆஞ்சநேயருக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆலங்குடி அபய வரதராஜ பெருமாள் கோவில் நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.