தமிழகத்தில் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு மே 25 நாளை மாலை 6:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில் தற்போது வரை 71 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கு மேல் அவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்பு இல்லை. எனவே மாறுதல் பெற விருப்பமுள்ள அனைத்து வகை அரசு பள்ளி ஆசிரியர்களும் எமிஸ் இணையதளம் மூலம் விரைவாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.