சென்னை கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (மகளிர்) 2024 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. இதில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு உதவித்தொகையுடன் இலவச பஸ் பாஸ், மிதிவண்டி மற்றும் சீருடை உள்ளிட்டவை வழங்கப்படும். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 044 2251 0001 என்ற தொலைபேசி எண் அல்லது www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தை அணுகவும்.