ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் பருப்பு, கோதுமை, சர்க்கரை போன்ற பொருட்கள் இலவசமாகவும் மலிவு விலையிலும் வழங்கப்படுகின்றன. ரேஷன் கடைகளில் முறைக்கேடு அதிகரித்துள்ளதால், குடும்ப அட்டைதாரர்களுக்கு சரியான முறையில் பொருள்கள் கிடைக்கவில்லை.

இந்நிலையில், கடைகளில் ஆய்வுக்கு செல்லும் போது அடிக்கடி புகாருக்கு உள்ளாகும் ஊழியர்களின் விபரம் அடங்கிய பட்டியல் தயாரித்து, அவர்களை தொடர்ந்து கண்காணிக்கவும், முறைகேடுகளுக்கு துணைப்போகும் ரேஷன் கடை ஊழியர்களை நிரந்தர பணிநீக்கம் செய்யவும் அரசு முடிவு எடுத்துள்ளது.