தமிழகத்தில் சமீபத்தில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை என்பது தொடங்கியுள்ளது. இந்த நிலையில் மாணவர் சேர்க்கை தொடர்பாக அரசு மற்றும் தனியார் கலை அறிவியல் கல்லூரிகள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அதில், தரவரிசை பட்டியல் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். அரசு கல்லூரிகள் www.tngasa.in என்ற இணையதளத்திலும், அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகள் தங்களது இணையதளத்திலும் மாணவர் சேர்க்கை மற்றும் கட்டண விவரங்களை வெளியிட வேண்டும் என்று உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.