தமிழகத்தில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஆண்டு இறுதி தேர்வுகள் முடிவடைந்து கடந்த ஏப்ரல் மாதம் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. வழக்கமாக கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற உள்ளதால் பள்ளிகள் திறப்பு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.

மே 25ஆம் தேதிக்கு பிறகு வெயிலின் தாக்கம் அதிகரிக்க கூடும் என கூறப்படுவதால் பள்ளிகள் திறப்பு மேலும் தள்ளி போக வாய்ப்புள்ளதாகவும் தெரிகின்றது. இதனால் ஜூன் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேசமயம் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் மே 31ஆம் தேதிக்குள் அனைத்து பாட புத்தகங்களையும் அனுப்ப பள்ளி கல்வித்துறை நேற்று உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.