எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதில் அளித்தததாவது “தங்கமணி, வேலுமணி வீட்டில் ரெய்டு நடந்தபோது EPS என்ன செய்தார்?. பா.ஜ.க மிரட்டலுக்கு பயந்து மாற்று கட்சிக்கு எம்.பி பதவியை விட்டுக்கொடுத்தவர் இபிஎஸ். மருத்துவமனையில் செந்தில் பாலாஜியை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று பார்த்ததை இபிஎஸ் கொச்சைபடுத்தி பேசுகிறார்.

இதற்கிடையில் எந்தவித விசாரணைக்கும் தயார் என முதல்வரும் தெரிவித்திருந்தார். மேலும் செந்தில் பாலாஜியிடம் மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தார்” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.