
ஆந்திர மாநிலத்தில் உள்ள அடி கொப்பக்கா என்ற பகுதியில் நடந்த ஒரு சம்பவம் பதைபதைக்க வைத்துள்ளது. அதாவது அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு 13 வயது சிறுவன் தன்னுடைய அம்மாவின் செல்போனில் ஆபாச வீடியோ பார்த்துள்ளார். இதனைப் பார்த்து அந்த சிறுவன் ஒரு 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
நடந்த சம்பவங்களை சிறுமி தன் பெற்றோரிடம் கூற அவர்கள் கேட்டு அதிர்ந்தனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் நடத்திய விசாரணையில் அம்மாவின் போனில் ஆபாச வீடியோ பார்த்த அந்த சிறுவன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறுமியை பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது.
இன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்துவிட்ட நிலையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கிறார்கள். மேலும் நீண்ட நேரம் சிறுவர்கள் செல்போன் பார்ப்பதால் மனநிலை மற்றும் உடல்நிலை பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கப்படும் நிலையில் தற்போது இதுபோன்ற சம்பவங்களும் அரங்கேறி வருவதால் குழந்தைகள் கையில் செல்போனை கொடுப்பதற்கு முன்பு பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும்.