அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் கவனித்து வந்த துறைகள் வேறு அமைச்சர்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது ஓமந்தூரார் மருத்துவமனையில் நெஞ்சுவலியால் அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நீதிமன்றத்தில் ஆச்சப்படுத்தும்படி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள மனு மீது செந்தில் பாலாஜியின் கருத்தை கேட்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.