மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ராஜ்கார் மாவட்டத்தை சேர்ந்த முதுநிலை பட்டதாரி ஆஷா மாளவியா(24). இவர் தேசிய அளவில் மலையேறும் வீராங்கனை ஆவார். இந்நிலையில் இந்தியாவில் வெளிநாட்டு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற கருத்து இருக்கிறது. அந்த கருத்து தவறானது என்பதை நிரூபிக்கும் வகையில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கான அதிகார பகிர்வை வலியுறுத்தி கடந்த நவம்பர் மாதம் 1- ஆம் தேதி அன்று போபாலில் ஆஷா 28 மாநிலங்களில் 25 ஆயிரம் கிலோமீட்டர் சைக்கிள் பயணத்தை தொடங்கியுள்ளார்.

வருகிற ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி சுதந்திர தினம் அன்று டெல்லியில் குடியரசு தலைவரை சந்தித்து தனது சைக்கிள் பயணத்தை நிறைவு செய்யப் போவதாக ஆஷா தெரிவித்துள்ளார். இந்நிலையில் விருதுநகர் வந்த ஆஷா கலெக்டர் மேகநாத ரெடியை சந்தித்துள்ளார். அப்போது கலெக்டர் ஆஷாவை ஊக்கப்படுத்தி பயணம் குறித்து விரிவாக கேட்டு வாழ்த்தி அனுப்பியுள்ளார்.