மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி தொடர்பான முக்கிய அறிவிப்பை இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே வாசன் வெளியிட்டுள்ளார். அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாகவும் பாஜக கூட்டணியில் போட்டியிட உள்ளதாகவும் அறிவித்துள்ளார். நாளை பல்லடத்தில் நடைபெற உள்ள பொதுக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும் வாசன் அறிவித்துள்ளார். நேற்றைய தினம் ஜிகே வாசன் இல்லத்தில் பாஜக முக்கிய நிர்வாகிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த நிலையில் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.