ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு விசாரணை நாளை உச்சநீதிமன்றத்தில் நடைபெற இருக்கிறது. இந்த வழக்கின் விசாரணையை முன்னிட்டு தேர்தல் ஆணையம் தற்போது அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த பதில் மனுவில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு அதிமுகவில் இன்னும் இரட்டை தலைமையே தொடர்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதால் எடப்பாடி பழனிச்சாமி இணை ஒருங்கிணைப்பாளராகவே இருக்கிறார். இதனால் இருவரும் சேர்ந்து பொது வேட்பாளர் நியமித்தால் மட்டுமே இரட்டை இலை சின்னம் கிடைக்கும். ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறப்படுவதால் தற்போது இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது அதிமுக நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.