அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் ஓபிஎஸ் தாக்கல் செய்த பதில் மனு தொடர்பான விசாரணை நாளை உச்சநீதிமன்றத்தில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தற்போது பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை தேர்தல் அதிகாரி முடிவு செய்வார்.

இரட்டை இலை சின்னத்துக்கான படிவத்தில் அதிமுகவில் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் மட்டுமே கையெழுத்திட முடியும். ஒரு கட்சியின் உட்கட்சி தேர்தலை கண்காணிப்பது தேர்தல் ஆணையத்தின் வேலை இல்லை. மேலும் பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்காததால் அதிமுகவில் இரட்டை தலைமையே இன்னும் தொடர்கிறது என்று தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.