கலைஞர் நூற்றாண்டு தின பொதுக் கூட்டம் கும்பகோணத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் மாநில நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்று பேசியதாவது, ஒரு மாநிலத்தின் ஆளுநர் என்பவர் மாநில அரசுக்கும் ஒன்றிய அரசுக்கும் பாலமாக விளங்க வேண்டும். மாநில அரசு செய்யும் பணிகளுக்கு ஊக்கமளிக்கும் அடிப்படையில் செயல்பட வேண்டும்.

இந்தியாவில் அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து வரும் மாநிலங்களில் முதன்மையானதாக விளங்குவது தமிழகம். இங்கே இருந்து யாரும் பீகாருக்கு வேலை தேடி செல்வதில்லை. அதற்கு மாறாக பீகாரில் இருந்து தான் இங்கு பலர் வேலைக்கு வந்திருகின்றனர். அதிலும் குறிப்பாக ஆளுநர் கூட பீகாரிலிருந்து இங்கு வந்துள்ளார் என அவர் கூறினார்.