பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து நேற்று பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் தலித் தலைவர்கள் முதலமைச்சராக வருவதற்கான சூழல் இருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். அவர் கூடுதலாக சீட் கிடைக்க வேண்டும் என்பதற்காக இப்படி பேசி உள்ளார். அதன் பிறகு கூட்டணி வேண்டும் மற்றும் வேண்டாம் என்று சொல்பவர்களுக்கு இன்னமும் ஒரு பயம் இருக்கிறது.
உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நாங்கள் அதிமுக என்ற கட்சியை மறந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. நாங்கள் எங்கள் வேலையை மட்டும் தான் பார்த்துவிட்டு செல்கிறோம் என்று கூறினார். மேலும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் இருந்த நிலையில் தொடர்ந்து அதிமுக தலைவர்களை பற்றி அண்ணாமலை அவதூறாக பேசி வருவதாக கூறி அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.