இந்திய ரயில்வேயானது பயணிகளுக்காக பல சலுகைகளையும், வசதிகளையும் செய்து கொடுக்கிறது. அனைத்து தரப்பு மக்களும் குறைவான கட்டணத்தில் பயணிக்கும் அடிப்படையில் ரயில்வேயில் உள்ள சலுகைகள் உள்ளிட்டவை பற்றி பெரும்பாலான பயணிகளுக்கு தெரிவதில்லை. ரயில் 2 மணி நேரம் அல்லது அதற்கு மேல் தாமதமாக வந்தால் காத்திருக்கும் பயணிகளுக்கு உணவு, சிற்றுண்டி, தண்ணீர் ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது.

இது ராஜ்தானி, துரந்தோ உட்பட சில எக்ஸ்பிரஸ் ரயில்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. இதற்கென தனி சட்டமே இருக்கிறது. இது நீண்ட நாட்களாகவே அமலில் உள்ளது. இதனிடையில் ரயில்வே காலை உணவுக்கு தேநீர் (அ) காபி மற்றும் பிஸ்கட் வழங்குகிறது. அத்துடன் ஒரு பட்டர் சிப்லெட், 4 ரொட்டிகள் கொடுக்கப்படுகிறது. மதியம் உணவு வேளையில் பருப்பு, ரொட்டி மற்றும் காய்கறிகள் வழங்கப்படும்.