மத்திய மின்னணு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் ஒரு முக்கிய செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆதார் அடையாள அட்டையில் குடும்ப தலைவர் என்கிற முறையை யுஐடிஏஐ அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஆதார் அட்டையில் இருப்பிட சான்று ஆவண வசதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது புதிதாக குடும்பத் தலைவர் முறை சேர்க்கப்பட்டுள்ளது. அதன் பிறகு 18 வயதுக்கு மேற்பட்ட எந்த ஒரு நபரும் குடும்ப தலைவராக தங்களுடைய பெயரை பதிவு செய்து கொள்ளலாம். இந்த முகவரியை குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்நிலையில் ஒருவர் முகவரியை மாற்ற வேண்டும் என்றால் மை ஆதார் (https://myaadhaar.uidai.gov.in) இணையதளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். அதன் பிறகு குடும்ப தலைவரின் ஆதார் எண்ணை சரி பார்த்து பூர்த்தி செய்ய வேண்டும். குடும்பத் தலைவருடன் என்ன உறவு என்ற ஆவணத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். இதற்கு குடும்பத் தலைவருடன் கொண்டிருக்கும் உறவு, அவர்களது பெயர், குடும்ப அட்டை, தேர்வு மதிப்பெண் சான்றிதழ், திருமண சான்றிதழ் மற்றும் கடவுச் சான்றிதழ் போன்றவற்றை குடும்பத் தலைவருடன் கொண்டிருக்கும் உறவுக்கு ஆவணமாக சமர்ப்பிக்கலாம்.

ஒருவேளை இந்த ஆவணங்கள் இல்லாவிடில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழங்கியுள்ள குறிப்பிட்ட வடிவத்தில் குடும்பத் தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட்ட சுய சான்றிதழை பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 50 செலுத்திய பிறகு செல்போனுக்கு குறுஞ்செய்தி வரும். இந்த குறுஞ்செய்தி வந்த பிறகு 30 நாளுக்குள் குடும்பத் தலைவர் உங்களுடைய பரிந்துரையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஒருவேளை குடும்ப தலைவர் உங்களுடைய பரிந்துரையை ஏற்காகாவிட்டால் அல்லது அவருடைய முகவரியை பகிர்ந்து கொள்ள விருப்பம் தெரிவிக்காவிட்டால் உங்களுடைய ஆவணம் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. ஒருவேளை குடும்ப தலைவர் நிராகரித்தாலும் உங்களுடைய கட்டணம் திரும்ப தரப்பட மாட்டாது. மேலும் குடும்ப தலைவரின் அனுமதியுடன் ஆதார் கார்டில் இந்த முறையை நீங்கள் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.