சூடான் நாட்டில் துணை ராணுவத்தினர் மற்றும் ராணுவத்தினருக்கு இடையே அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கத்தில் கடந்த வருடம் முதல் மோதல் போக்கு நீடித்து வருகிறது. அதாவது ராணுவத்துடன் துணை இராணுவத்தை இணைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்படாததால் இருதரப்புக்கும் இடையே பிரச்சனை வெடித்து மோதல் போக்கு ஆரம்பித்தது. இவர்கள் இருதரப்பும் நடத்தி வரும் தாக்குதலில் ஏராளமான மக்கள் இறந்ததோடு, பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் சூறையாடப்பட்டது.

இந்நிலையில் எல் பாஷர் பகுதியில் தற்போது திடீரென தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த பயங்கர தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 30 பேர் கொல்லப்பட்ட நிலையில் 17 வீரர்களும் கொல்லப்பட்டனர். மேலும் தொடர் மோதல் போக்கால் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், 90 லட்சத்திற்கும் மேற்பட்டோர் புலம்பெயர்ந்து சென்றுள்ளனர். இந்தத் தொடர் கலவரங்களால் அந்நாட்டில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.