அமெரிக்காவை சேர்ந்த சிறுவன் ஜோர்டான். இந்த சிறுவன் பிறக்கும்போதே இடதுகை இல்லாமல் பிறந்த நிலையில் அவருக்கு தற்போது பயோனிக் கை பொருத்தப்பட்டுள்ளது. இந்த சிறுவனுக்கு 5 வயது ஆகும் நிலையில் மிக இளம் வயதில் பயோனிக்  கை பொருத்தப்பட்ட நபர் என்ற பெருமையையும் பெற்றுள்ளான்.

இந்த சிறுவனுக்கு அயர்ன் மேன் படத்தில் வரும் சிவப்பு மற்றும் தங்க நிறத்தில் வடிவமைக்கப்பட்ட கை பொருத்தப்பட்டுள்ள நிலையில் சார்ஜர் மூலம் இது இயங்கும். இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் 14 மணி நேரம் வேலை செய்யும். மேலும் கடந்த வருடம் இங்கிலாந்தை சேர்ந்த 10 வயது சிறுவன் ஒருவனுக்கு பயோனிக்  கை பொருத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.