மனிதர்களின் அபாரமான கூட்டு உழைப்பையும், அசாத்திய ஒருங்கிணைப்பையும் வெளிக்காட்டும் நெஞ்சை நெகிழ வைக்கும் வீடியோ ஒன்று தற்பொழுது சமூக ஊடகங்களில் இணையவாசிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
அந்த வைரல் வீடியோவில், ஒரு லாரியின் மீது ஐந்து முதல் ஆறு தொழிலாளர்கள் நிற்க, மற்ற தொழிலாளர்கள் தரையில் வரிசையாக நின்றுகொண்டு எவ்வித குழப்பமும் இன்றி மிகவும் அதிவேகமாகவும், புத்திசாலித்தனமாகவும் வேலை செய்கிறார்கள்.
கீழே இருக்கும் தொழிலாளர்கள் கனமான சுமைப் பொருட்களை எடுத்து கூட்டாக மேல்நோக்கி நகர்த்த, லாரியில் இருப்பவர்கள் அவற்றை நொடிப் பொழுதில் ஒழுங்காக அடுக்கிக் கொண்டே போகிறார்கள்.
Team Work..🤝
मशीनों की रफ्तार देखी होगी लेकिन आज इंसानों की रफ्तार
देख लीजिए इसे कहते हैं टीम वर्क की असली ताकत नीचे सेऊपर तक एक एक नहीं पूरा बंडल पल भर में पहुंच रहा है जब
तालमेल और मेहनत एक साथ हो तो मुश्किल काम से आसान
लगने लगता है कैसा लगा आपको इनका तालमेल है ना गजब pic.twitter.com/De2GJ3f3Zw— KUNDAN PATEL (@KUNDAN00PATEL) June 25, 2026
“>
இதைப் பார்த்த நெட்டிசன்கள், “ஒரு குழுவிற்குள் நம்பிக்கை, சரியான திட்டமிடல் மற்றும் கூட்டு உழைப்பு இருந்தால் மனிதர்களால் இயந்திரங்களை விட அதிவேகமாகப் பணியாற்ற முடியும்; இவங்க வெறும் மனுசங்க இல்ல, நடக்குற மெஷின்!” என்று தொழிலாளர்களின் உழைப்பைப் பாராட்டித் தள்ளி வருவதால், இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெரிதும் பகிரப்பட்டு வருகிறது.
