தெலங்கானா மாநிலம் காமாரெட்டி மாவட்டத்தில் அமைந்துள்ளது கொத்தப்பள்ளி கிராமம். இந்த கிராம பஞ்சாயத்து அலுவலகத்திற்கு, கடந்த ஜனவரி மாதத்திற்கு .11.41 கோடிரூபாய்  மின் கட்டணம் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பஞ்சாயத்து ஊழியர்கள் இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளனர்.

அப்போது இயந்திரக்கோளாறு காரணமாக தவறு ஏற்பட்டதாகவும், மீண்டும் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இந்த மின்கட்டண ரசீது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.