நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்பு முடிவுகளை புதிய தலைமுறை தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. அதில், தற்போது இருக்கக்கூடிய எதிர்க்கட்சித் தலைவர்களில் சிறந்த பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு தமிழகத்தில் அதிகப்படியான மக்கள் ராகுல் காந்திக்கு வாக்களித்துள்ளனர். இரண்டாவது இடத்தை மம்தா பானர்ஜியும் மூன்றாவது இடத்தை அரவிந்த் கெஜ்ரிவாலும் பிடித்திருக்கின்றனர்.