இனிமேல் வெறும் ரூ500-ஐ செலுத்தி கேஸ் சிலிண்டரை வாங்கிக் கொள்ளலாம். நாளுக்கு நாள் அதிகரிக்கும் கேஸ் சிலிண்டர் விலையிலிருந்து நிவாரணம் அளிக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இப்போது கேஸ் சிலிண்டரின் விலையானது 1000 ரூபாயை தாண்டி இருக்கிறது. இதனிடையில் ரேஷன் அட்டையை காண்பித்தால் பாதி விலையில் சிலிண்டரை பெறலாம்.

இந்நிலையில் பாதி விலையில் கேஸ் சிலிண்டர்களை கொடுக்க இப்போது ராஜஸ்தான் அரசானது முடிவு செய்திருக்கிறது. மாநில அரசு எடுத்த இம்முடிவு 2023 ஏப்ரல் முதல் ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் நடைமுறைபடுத்தப்படும். அதே நேரம் இந்த பலன் பிபிஎல் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.