பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் டைட்டிலை வென்றவர் அசீம். வீட்டுக்குள் இருக்கும்போது எதற்கெடுத்தாலும் கோபப்படுவது கத்துவது என அசீம் நடந்து கொண்ட நிலையில் அவருக்கு டைட்டில் மட்டும் கிடைக்கவே கூடாது என பார்வையாளர்கள் வேண்டிக் கொண்டார்கள். ஆனால் கடைசியில் அவருக்குத்தான் டைட்டில் கிடைத்தது. டைட்டில் வென்ற மகிழ்ச்சியில் அசீம் அடிக்கடி சமூக வலைதள பக்கத்தில் தன்னுடைய புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்தித்து பேசிய புகைப்படங்களை அசீம் தன்னுடைய வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சீமானை சந்தித்த மகிழ்ச்சியில் அவரை கட்டிப்பிடித்து அசீம் முத்தம் கொடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தன் வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள அசீம் சீமான் குறித்து ஒரு  பதிவையும் போட்டுள்ளார். அதாவது எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே, இங்கு பிறப்பினும் அயலான் அயலானே, கொள்கை, கோட்பாடு போன்றவற்றையெல்லாம் தாண்டிய உறவிது. என்றும் அண்ணன் சீமானின் அன்பு தம்பி நான் தான் என்று பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/actor_azeem/status/1627665761425821698?t=qTb-8fn4LDhZoD5DUYbaFA&s=19