டெல்லியில் உள்ள ரோகிணி என்ற பகுதியில் டெல்லி மாநகர பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் ஒரு இளம் பெண் பயணித்த நிலையில், பெரிய அளவில் பேருந்தில் கூட்டம் இல்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இளம்பெண் முன் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபர் அந்த பெண்ணிடம் தவறான முறையில் நடந்து கொள்ள முயற்சி செய்ததோடு தன்னுடைய அந்தரங்க உறுப்பை காட்டி சுய இன்பம் செய்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் தன் அருகில் உள்ள ஒரு வாலிபருக்கு சைகை மூலம் இதை தெரிவித்துள்ளார்.

உடனே அந்த வாலிபர் பேருந்தில் நடந்த அனைத்தையும் தன் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வாலிபர் அந்த பெண்ணிடம் கதறி அழுது தன்னை மன்னித்து விடுமாறு கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகிய‌ நிலையில், டெல்லி போலீசார் இளம் பெண்ணிடம் புகார் கொடுக்குமாறு கூறியுள்ளனர். ஆனால் அந்த பெண் புகார் கொடுப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் பெண்ணிடம் தவறான முறையில் நடந்து கொள்ள முயற்சி செய்த வாலிபர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.