வாஷிங் மெஷினால் ஒருவருடைய உயிர் பரிதாபமாக போனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது., இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் வாஷிங்மெஷினில் ஒருவர் துணி துவைக்க வருகிறார். எல்லா துணிகளையும் மிஷினில் போட்டு தண்ணீரும் ஊற்றுகிறார் .

பின்னர் வாஷிங் பவுடரை போட்டுவிட்டு வாஷிங்மெஷினில் உள்ள நீரில் கையை கழுவ முயற்சித்துள்ளார்.  அப்பொழுது அதில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவருடைய உடலில் மின்சாரம் பாய்ந்து மெல்ல கீழே விழுந்து தன்னுடைய உயிரை விட்டுள்ளார். இந்த வீடியோ  இணையத்தில் வேகமாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.