நடிகை கங்கனா ரனாவத் 2006 ஆண்டு முதல் இந்தி திரைப்படங்களில் தோன்றி வருகிறார். கேங்ஸ்டர் படத்தில் நடித்ததற்காக பிலிம்பேரின் சிறந்த அறிமுக நடிகை விருதை வென்றார். இயக்குனரும் படப்பிடிப்பாளருமான ஜீவா இயக்கிய தாம் தூம் திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.
இந்நிலையில் எமர்ஜென்சி காலத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் ‘எமர்ஜென்சி’ படத்துக்காக தனது சொத்தை அடகு வைத்துள்ளதாக நடிகை கங்கனா ரனாவத் பதிவிட்டுள்ளார். நான் படத்திற்காக கவலைப்படவில்லை என்று பலர் நினைக்கிறார்கள், ஆனால் நான் என் சொத்துக்கள் அனைத்தையும் அடமானம் வைத்துள்ளேன். ஷூட்டிங் நேரத்தில் டெங்குவால் என் ரத்த அணுக்கள் வெகுவாகக் குறைந்து விட்டன. இருப்பினும், நான் படப்பிடிப்பில் கலந்துகொண்டேன் என்றார்.