மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள கிதிர்பூர் ரயில் நிலையத்திற்கு அருகே ஓடும் ரயிலில் இளைஞர்கள் சிலர் ஆபத்தான முறையில் ரகளையில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் ரயிலின் இருக்கையில் ஏறி நின்று அவசர கால சங்கிலியை இழுப்பதும், மற்றவர்கள் வாசலுக்கு அருகே நின்றுகொண்டு வினோதமான சத்தங்களை எழுப்பி அலப்பறை செய்வதும் பதிவாகியுள்ளது.

 

மேலும் ஒரு இளைஞர் ஓடும் ரயிலின் மேற்கூரையைப் பிடித்துக் கொண்டு தொங்குவதும், மற்றொருவர் படிக்கட்டில் நின்றபடி ஆபத்தான முறையில் வெளியில் சாய்ந்து வேடிக்கை பார்ப்பதுமான காட்சிகள் பயணிகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளன. இந்த விடியோவைக் கண்டு கொதிப்படைந்த இணையவாசிகள் அந்த இளைஞர்களைக் கைது செய்யக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதற்குப் பதிலளித்துள்ள ரயில்வே பாதுகாப்புப் படை, சம்பந்தப்பட்ட வீடியோ குறித்து புகாரைப் பதிவு செய்துள்ளதாகவும், குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளது.