மதுரை மாவட்டத்திலுள்ள பெரியார் பேருந்து நிலையம் அருகே திடீர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராமசுப்பிரமணி. இவர் மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையத்தில் பயணிகளை பேருந்துகளில் அனுப்பி வைக்கும் டிக்கெட் ஏஜெண்டாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் சந்தன மாரியம்மன் கோவில் முன்பு நின்று தனது நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் ராமசுப்பிரமணியை அறிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இதில் அவருக்கு தலை,நெற்றி, கை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டதை தொடர்ந்து சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேய உயிரிழந்து விட்டார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் மது போதையில் இருந்த கும்பல் ஆளை மாற்றி கொலை செய்தார்களா..? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.