வெறும் லைக் மற்றும் ஷேருக்காக இக்காலத்து இளைஞர்கள் யூடியூபில் வித்தியாசமாக வீடியோக்களை போடுகின்றனர். மேலும் அதன் மூலம் காசு சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் ரீல்ஸ் போட்டு ஃபாலோயர்களை ஏற்றி சீக்கிரமாக பணக்காரனாக வேண்டும் என்று இன்றைய இளம் தலைமுறையினர் விரும்புகின்றனர். அதே நேரம் சிலர் பொழுது போக்கிற்காக சமூக வலைத்தளத்தில் ரீல்ஸ் போட ஆரம்பித்து இன்று அதை முழு நேர வேலையாக செய்வதோடு மட்டுமல்லாது சிலர் லைக்குக்காக உயிரையே பணயம் வைக்கின்றனர்.
அந்த வகையில் உத்திரபிரதேசம் மாநிலம் ஆக்ராவை சேர்ந்த நபர் ஒருவர் நாய்க்குட்டிக்கு பீர் கொடுத்துள்ளார். பின்னர் அது தடுமாறி நடப்பதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் லைக்குக்காக வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவிற்கு பலரும் கண்டனம் தெரிவித்ததோடு காவல்துறையினர் அந்த நபரை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் ஒரு சிறிய அளவு ஆல்கஹால் கூட நாய்களுக்கு விஷமாக மாறும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக சிறிய நாய்க்குட்டிகளுக்கு மது மிகவும் ஆபத்தானது. மேலும் ஹேண்ட்ஸ் சானிடைசர் மற்றும் ஆன்ட்டி ஃபிரிஸ் உள்ளிட்ட பிற வகைகள் உட்கொள்வதும் மிகவும் ஆபத்தானது. ஆகவே மனிதர்கள் தங்களுடைய சுயநலத்திற்காக வாயில்லா ஜீவன்களை இவ்வாறு துன்புறுத்த வேண்டாம் என சமூக ஆர்வலர்களும் பொது மக்களும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அதேபோல இளைஞர்கள் சமூக வலைதள ரீல்ஸ்காக இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
#आगरा
रील बनाने के लिए बेजुबान कि जिंदगी के साथ खेलता रहा युवक
वायरल वीडियो में कुत्ते के पिल्ले को पिला रहा है बीयर
युवक की इस हरकत का वीडियो सोशल मीडिया पर हुआ वायरल
आगरा थाना सिकंदरा क्षेत्र के शास्त्री पुरम क्षेत्र का मामला@agrapolice @Uppolice #viralvideo pic.twitter.com/EeD78DMtmI— Aviral Singh (@aviralsingh15) October 1, 2024
“>