
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாத்தூர் கிராமத்தில் ஆதி கேசவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மதுரை விமான நிலையத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று ஆதிகேசனும் அவரது நண்பரும் மோட்டார் சைக்கிளில் மாத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் குயவன் குளம் விலக்கு அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக மதுரை நோக்கி வந்த அரசு பேருந்தும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த ஆதி கேசவனும் அவரது நண்பரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று இரண்டு பேரின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.