புதுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து அரசு டவுன் பேருந்து கீரனூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை மணிவாசன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கண்டக்டராக வெள்ளைச்சாமி என்பவர் பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் ரங்கம்மாள் சத்திரம் அருகே சென்றபோது திருச்சியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி வேகமாக வந்த கார் பேருந்து மீது பயங்கரமாக மோதி சுக்குநூறாக நொறுங்கியது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஹரிசங்கர்(29) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து காரில் பயணம் செய்த விஜயலட்சுமி, முனிய பெருமாள், முருகராஜ், பேருந்து டிரைவர், கண்டக்டர் உட்பட 12 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஹரி சங்கரின் உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.