விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் மாரியம்மன் கோவிலில் ஹரிகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த எட்டு மாதத்திற்கு முன்பு ஹரிகிருஷ்ணன் சந்தியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். நேற்று ஹரி கிருஷ்ணன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது ஆமூர் செல்லும் பாதை அருகே முன்னால் சென்ற வாகனம் எதிர்பாராமல் திரும்பியது.

இதனால் நிலைதடுமாறிய ஹரிகிருஷ்ணன் அந்த வாகனத்தின் மீது மோதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று ஹரிகிருஷ்ணனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.