செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், ஆளுநர் ஒரு பத்தாம் பசலி நபர் என்பது இதிலிருந்து தெரிகிறது.  நீண்ட நெடுங்காலமாக இருந்த மண்ணில் நிலைத்திருக்கக்கூடிய  பழமை வாதத்தை… மூடநம்பிக்கையை…  சமூகம் அப்படியே பின்பற்ற வேண்டும்.  இழி தொழில்களை, குலத்தொழில்களை அப்படியே பாதுகாக்க வேண்டும் என்கிற 100 விழுக்காடு வடிகட்டிய சனாதனி தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என் ரவி.

அவர் ஜமுக்காலத்தால் வடிக்கப்பட்ட ஒரு சனாதனி. மூச்சுக்கு 300 முறை சனாதனத்தை பற்றி பேசக்கூடியவராக இருக்கிறார். வள்ளலார் சனாதனம்  பேசியதாக சொல்கிறார்.  திருக்குறளை சனாதனத்தின்  நூல் என்று சொல்லுகிறார். அவர் ஒவ்வொரு நாளும் உளறிக் கொண்டிருக்கிறார. சனாதன  பித்து அவரை பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. அவருடைய இந்த கருத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக எதிர்க்கிறது,  கண்டிக்கிறது.

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அவர்கள் சனாதனத்தில் ஏற்றத்தாழ்வு இல்லை. பொதுமேடையில் நான் விவாதிக்க தாயார். திமுக விவாதிக்க தயாரா? விவாதத்தில் என்னிடம் தோற்றுவிட்டார்கள் என்றால் ? திமுக ஆட்சியையே கலைக்கணும், திமுக கட்சியையே கலைக்கணும்  என  சொன்னது, கவன ஈர்ப்புக்கான ஒரு கருத்து,  அவ்ளோதான். அவர் 15, 20 ஆண்டுகளுக்கு முன்னால் பேசிய பேச்சையும், இதையும் ஒப்பிட்டு பார்த்தால் தெரியும்.

பட்டியில் சமூகத்தை சார்ந்தவர்கள் பாதிப்படைவது என்பது நீண்ட காலமாக இருந்து வரும் ஒன்றுதான். ஆனால் ஓபிசி சமூகத்தை சார்ந்தவர்கள் கடுமையாகபாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள்மோடி ஆட்சியில்… இது தான்  மிக முக்கியமானது. இந்துக்கள்…  இந்துக்கள்… இந்துக்களின் பாதுகாவலர்கள் நாங்களே என்று திரும்ப திரும்ப சொல்லிக் கொள்கின்ற பாஜகவினரின் ஆட்சியில்  பிற்படுத்தப்பட்ட –  மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை சார்ந்த,  ஓபிசி பிரிவினர் பல வகையிலும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.  இதை இப்போது மக்கள் உணர்வு தொடங்கி இருக்கிறார்கள்.  அதற்குரிய பதிலை நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் வெளிப்படுத்துவார்கள்,  விடை கொடுப்பார்கள் என தெரிவித்தார்.