ஆந்திர மாநிலம் மதனப்பள்ளி அருகே உள்ள நீருகட்டு வாரி பள்ளி கிராமத்தில், மனிதநேயமே வெட்கித் தலைகுனியும் வகையிலான ஒரு கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கோபிநாத் என்ற நெசவுத் தொழிலாளியின் 7 வயது மகள் ரிஷிகா பிரியா, வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென மாயமானார்.
பதறிப்போன பெற்றோர் தேடியபோது, பக்கத்து வீட்டில் வசிக்கும் நரேந்திரா என்பவன் மீது சந்தேகம் எழுந்தது. அவனது வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அங்கிருந்த ஒரு தண்ணீர் பேரலுக்குள் (Drum) சிறுமி சடலமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு உறவினர்கள் அலறினர்.
சிறுமியைத் தந்திரமாக வீட்டுக்குள் அழைத்துச் சென்ற அந்த காம கொடூரர், அவரை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.
ஆத்திரமடைந்த ஊர் பொதுமக்கள் அந்த இளைஞரைப் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். பிஞ்சு மகளைப் பறிகொடுத்த பெற்றோரின் கதறல் அந்த கிராமத்தையே கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.
