தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் மீனா. ஒரு காலத்தில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த மீனா தற்போது படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். நடிகை மீனா அஜித்துடன் ஜோடியாக ஆனந்த பூங்காற்றே, சிட்டிசன், வில்லன் ஆகிய   3 படங்களில் நடித்துள்ள நிலையில் விஜயுடன் சேர்ந்து ஒரு படத்தில் கூட நடித்தது கிடையாது. பிரியமுடன் மற்றும் பிரண்ட்ஸ் போன்ற படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு மீனாவுக்கு சென்றது. ஆனால் அந்த சமயத்தில் கால்ஷீட் பிரச்சனையின் காரணமாக மீனாவால் விஜய் படத்தில் நடிக்க முடியவில்லை. இருப்பினும் ஷாஜகான் படத்தில் நடிகர் விஜயுடன் சேர்ந்து சரக்கு வச்சிருக்கேன் என்ற ஒரு பாடலுக்கு மீனா குத்தாட்டம் போட்டார். இந்தப் பாடல் சூப்பர் ஹிட் ஆனது. இந்நிலையில் நடிகை மீனாவின் மகள் நைனிகா விஜயின் தெறி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

நைனிகாவின் நடிப்பை பார்த்து அசந்து போன விஜய் மீனாவிடம் புகழ்ந்து பேசியுள்ளார். அப்போது மீனாவிடம் ஒரு கேள்வியையும் கேட்டுள்ளார் விஜய். அதாவது நீங்கள் அஜித்துடன் சேர்ந்து மூன்று படத்தில் நடித்துள்ளீர்கள். ஆனால் என்னுடன் ஒரு படத்தில் கூட நடித்தது இல்லை. உங்களுக்கு என்னை விட அஜித் தான் பிடிக்குமா என விஜய் கேட்டுள்ளார். இதைக் கேட்ட உடன் மீனா அதிர்ச்சியாகியுள்ளார். பிறகு அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. அந்த சமயத்தில் டேட்ஸ்  பிரச்சினையின் காரணமாக என்னால் உங்கள் படத்தில் நடிக்க முடியவில்லை என மீனா கூறியுள்ளார். மேலும் இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் அப்பா மகன் என இருவேடத்தில் விஜய் நடிக்கும் படத்தில் அப்பாவுக்கு ஜோடியாக மீனாவை நடிக்க வைக்கலாம் என கூறி வருகிறார்கள்.