மலையாள சினிமாவில் ஒரு காலத்தில் கவர்ச்சி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் ஷகிலா. கேரளாவில் ஷகிலாவின் படங்கள் ரிலீஸ் ஆகும்போது தியேட்டர்களில் கூட்டங்கள் நிரம்பி வழிந்தது. இதனால் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட மம்மூட்டி மற்றும் மோகன்லால் போன்ற நடிகர்களின் படங்களின் வசூல் அடிவாங்கியது. இதன் காரணமாக மலையாள படங்களில் நடிக்க நடிகை ஷகிலாவுக்கு தடை விதிக்க பல்வேறு விதமான சதிகள் செய்யப்பட்ட நிலையில் மீண்டும் சென்னைக்கு திரும்பினார். இந்நிலையில் நடிகை ஷகிலா தன்னுடைய சினிமா அனுபவங்கள் குறித்து பேட்டி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, நான் மலையாள படங்களில் நடித்து கிட்டத்தட்ட 22 வருடங்கள் ஆகின்றபோதும் இன்னும் என்னை பழைய ஷகிலாவாகவே பார்க்கிறார்கள்.

என்னுடைய படம் ரிலீசாக கூடாது என்பதற்காக மம்மூட்டி சதி செய்ததாக கேள்விப்பட்டேன். அவருடைய கோபத்தில் நியாயம் இருக்கிறது. அவர்கள் 5 கோடி பட்ஜெட்டில் படம் எடுக்கும்போது நாங்கள் 10 லட்சம் பட்ஜெட்டில் எடுத்த படம் அந்த படத்தை பின்னுக்கு தள்ளினால் கோபம் வரத்தான் செய்யும். எனக்கு மலையாளத்தில் நடிப்பதற்கு தடை விதிக்க நினைத்ததுமே நான் மலையாள சினிமாவை விட்டு விலகி விட்டேன். நான் மலையாளத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டு வாங்கிய அட்வான்ஸ் பணத்தையும் திருப்பி கொடுத்து விட்டேன். மேலும் நான் நடித்த 23 படங்களுக்கு சென்சார் சான்றிதழ் கொடுக்காமல் தயாரிப்பாளர்களை கஷ்டப்படுத்தினர்கள்‌ என்று கூறினார்.