கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களை ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு,  அணைகளுடைய இருப்பைப் பொறுத்தவரை முதல் நாளிலிருந்து எவ்வளவு கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது என்பதை நாங்கள் அறிவித்துக் கொண்டிருக்கிறோம். 45,000 கன அடி  தண்ணீர் வருகின்ற  போது…. சொல்வதைக் கேளுங்க….. நான் விளக்கம் சொல்றேன்…..

நாங்கள் இங்கு வருகிறபோது இது 1 லட்சத்தை தொடும் என்பதை உணர்ந்து  அனைவருக்கும் வெள்ளப்பெருக்கு வரும் என்பதை அனைவருக்கும் குறுஞ்செய்தி மூலமாக முழுமையாக தெரிவித்திருக்கிறோம். அதற்குப் பிறகு இரவு கடுமையாக தொடர்ச்சியான மழை வருகிற போது ஒரு லட்சம் கன அடி அளவிற்கு தண்ணீர் வருகின்றது.

நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததன் காரணமாக தான் தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் இருக்கக்கூடியவர்களை நாம்  பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு போய் இருக்கோம். நீங்கள் குறிப்பிடுவது போல….  குற்றச்சாட்டு சொல்வது யார் வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் உண்மை நிலைமை என்னவென்றால்…

நீங்கள் சொல்வதை போல கரையோர மக்களுக்கு எந்தவித அறிவிப்புமே  இல்லாமல் இருந்தால் 1 லட்சத்து 40 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறபோது எவ்வளவு பெரிய உயிரிழப்பு வந்திருக்க வேண்டும்.  நாங்க முழுமையா சொன்னதுனால தான்  பல பேர் அங்கிருந்து முகாம் வந்து இருக்காங்க என பேசிய போது அருகில் இருந்த முதல்வர் ஸ்டாலின்,   2015ல் செம்பரம்பாக்கம் ஏரிய மனசுல வச்சுட்டு பேசுறீங்க நீங்க .அதுவல்ல இது அதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள் என தெரிவித்தார்.

பிறகு பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, முதல் நாள் இரவு செய்தியாளர் சந்திப்பில் அத்தனை பேரிடம் கேட்டுள்ளோம். இவ்வளவு தண்ணீர் வரப்போகுது…..  பாதுகாப்பான இடங்களுக்கு வரணும்…. ஒத்துழைப்பு கேட்டிருக்கிறோம்…..  எங்களுடைய கோரிக்கையை ஏற்று, காவல்துறை – தீயணைப்பு துறை கோரிக்கையை ஏற்று  பல பேரை அங்கிருந்து வெளியேற்ற்றிய காரணத்தினால் தான் உயிர் இழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளது. அதையும் மீறி சிலர் அங்கு இருந்துள்ளார்கள்.  இருந்தவர்களை அடுத்த நாள் படங்களை கொண்டு பல்வேறு இடங்களுக்கு சென்று காப்பாற்றி இருக்கிறோம் என தெரிவித்தார்.