தமிழக சட்டசபையில் பேசிய முதல்வர் முக.ஸ்டாலின்,  இங்கு மாண்புமிகு எதிர் கட்சி தலைவர் மிகுந்த அக்கறையோடு இந்த பிரச்சனை எடுத்து பேசினார். இன்றைக்கு இஸ்லாமிய சிறைவாசி  முன் விடுதலை பற்றி அதிமுக பேசுகின்ற பொழுது….  நான் கேக்கின்ற ஒரே கேள்வி… 

நீங்கள் 10 ஆண்டு காலமாக ஆட்சியில இருந்த போது  கண்ணை மூடி கொண்டு இருந்ததும் என்ன காரணம் ? அதை நான் இப்பொழுது அறிய விரும்புகிறேன். தருமபுரியிலே பேருந்தில் பயணித்த மாணவிகள் உயிரோடு பட்டப்பகலில் எரித்தவர்களை எம்.ஜி. ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு,

முன் விடுதலை செய்த உங்களுடைய அதிமுக ஆட்சி ஏன் இஸ்லாமிய சிறைவாசிகளை முன் விடுதலை செய்ய ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை ? என்பது தான்.. ஆணவத்தோடு இல்ல,  அடக்கத்தோடு நான் கேக்குற கேள்வி என தெரிவித்தார்.

பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, ஏன்னா இதுவரைக்கும் சிறுபான்மை மக்களுக்கு  அப்படியே நாடகத்தை நடத்திட்டு இருந்தாரு. என்னமோ இவர்கள்  தான் சிறுபான்மை மக்களை ஆதரிப்பதை போலவும்,  இவர்கள் ஆட்சிக்கு வந்தால் தான் சிறுபான்மையினரை பாதுகாப்பது போலவும் ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்தி வந்தார்.

இன்னைக்கு அந்த மாயத்தோற்றம்  காணாமல் போகின்ற சூழ்நிலை வருகின்ற பொழுது ஓ.. இன்றைக்கு இஸ்லாமியர்கள் எல்லாம் விழித்து கொண்டாங்க. சிறுபான்மையின மக்கள் எல்லாம் விழித்துக்கொண்டார்கள். ஆகவே இப்படிபட்ட தருணத்துல இப்படி பட்ட கருத்தை சொல்லி இன்றைக்கு திசை திருப்புவதற்கு தான் முதலமைச்சர், கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு மாறாக பேசுறாரு. இதுல 1000 பேருக்கு மேல விடுதலை பண்ணலாம். இதுல இஸ்லாமியர்களும் அடங்கி இருகாங்க என தெரிவித்தார்.