வாச்சாத்தி வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து 19 பேர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

சென்னை ஐகோர்ட் விதித்த தண்டனையை நிறுத்தி வைக்க கோரி 19 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் விதிக்கப்பட்டுள்ள தண்டனை எதிர்த்து 19 பேர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். ஏற்கனவே இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது. ஏற்கனவே முதன்மை குற்றவாளியான நாதன் என்பவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. நாதனின் மேல்முறையீட்டு மனு நீதிபதி கே. விஸ்வநாதன் அமர்வில் திங்கட்கிழமை விசாரணைக்கு வர உள்ளது.

இந்த வழக்கு விசாரணை வருகின்ற திங்கட்கிழமை வரும் என்று ஏற்கனவே பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், மற்ற 19 பேரும், அவர்கள் தரப்பிடமிருந்து உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் வனத்துறை அதிகாரி சிதம்பரம் உட்பட மற்ற 19 பேரும் இந்த தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று மனுவில் கோரிக்கை வைத்துள்ளனர். திங்கட்கிழமை நாதன் என்பவர்  தாக்கல் செய்த மனுவுடன் இணைத்து இந்த மனுவும் ஒன்றாக விசாரிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.