செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மான நஷ்ட ஈடு வழக்கு நான் மானம் இருப்பவர்களுக்குத்தான் போடுகின்றேன். ஒரு வழக்கு நான் போவேன் என்று நீங்கள் நினைக்கல…  நான் அமைதியாக இருந்த உடனே ரொம்ப ஆடிட்டீங்க நீங்க எல்லாரும்… வாய்க்கு வந்ததெல்லாம் பேசி முடிச்சிட்டீங்க…. நீங்க சொன்னத… ஊடகத்துல சொன்னத… பொதுவெளியில சொன்னத…. உலகம் பூரா என் மக்களிடம் சொன்னத….

ஒரு தடவை நீதிமன்றத்துக்கு வந்து சொல்லிருங்க… அதைத்தான் நான் கேட்கிறேன். சான்றுகளோட சொல்லிருங்க….. நீதிமன்றம் கேட்கும் இல்ல,  சான்று கேட்கும் இல்ல….அதனால நீதிமன்றத்துல சொல்லிடுங்க. இது ஒரு படிப்பினையாக எல்லோரும் எடுத்துக்கிடனும்.

பேசுறதுக்கு எவ்வளவோ இருக்கு. நாட்டுக்கும்,  மக்களுக்கும். கண்ணியம் என்கிறது… நாகரிகம் என்பது நீங்கள் கேள்வி கேட்கும் போது பதில் சொல்ற எங்களுக்கு மட்டும் இருக்கணும்னு இல்ல,  எல்லாருக்கும் இருக்கு. ஒரு சமூகத்தை மாத்தணும், முன்னேற்றம், அதுக்காக பாடுபடுகின்ற எல்லாத்தையும் நீங்க இப்படி இது பண்ணீங்கன்னா….

எனக்கு உறுதி இருக்கு  நின்னு போராடுகிறேன்….  எனக்கு பின்னால இப்படி ஒருத்தன் எவன் நிப்பான்.  ஓடிப் போய் விட மாட்டானா ? என் தாய் ஏறி அடிடா பாத்துக்கிறேன்…    என் பொண்டாட்டி போங்க நான் வரேன்னு சொல்றா ?  மத்த குடும்பமா இருந்தா தற்கொலை பண்ணி செத்துப் போயிருப்பான். என்னை நம்பி இத்தனை லட்சக்கணக்கான தங்கச்சிகள், அம்மாக்கள், தம்பிமார்கள், எவ்வளவு பேர் ? எங்களுக்கு தன்மானம் இல்லையா ? எங்களுக்கு மானம்  மரியாதை இல்லையா ? என தெரிவித்தார்.