
திமுக நடத்தும் நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டு பேசிய தயாநிதி மாறன் MP பேசும் போது, இன்றைக்கு நம் இளைஞர் அணி செயலாளர் திரு உதயநிதி ஸ்டாலின்… நான் நினைத்தேன் தமிழ்நாட்டில் மட்டும் தான் அவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்…. ராஜஸ்தானில் இதே தான்… நாமக்கல் மாதிரி சிம்டம்ஸ் ஸ்கூல் மாதிரி ராஜஸ்தான் கோட்டாவில் கிட்டதட்ட 22 மாணவர்கள் தற்கொலை செய்திருக்கிறார்கள்.
தேவையில்லாமல் இவர்கள் கொண்டு வருகின்ற முட்டாள்தனமான சட்டம். மோடி புத்திசாலியா ? கருப்பு பணத்தை ஒழிக்கின்றேன் என்று கொண்டு வந்தாரே… ஏன்ய்யா… கருப்பு பணத்தை ஒழிச்சியா நீ ? இப்ப 2000 ரூபாய் நோட்டை ஏன் ஒழிச்ச ? இதே மாதிரி ஒவ்வொன்றும் செய்கிறார்கள். ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் பத்திரிக்கை செய்தி வருகின்றது. மாணவர்கள் எல்லாம் மன அழுத்தத்தால் தற்கொலை பண்ணி கொள்கிறார்கள். இதற்க்கு காரணம் என்னெவென்றால், தொடர்ந்து நீயும், நானும் படிக்க கூடாது.
இங்கு இருக்கின்ற MBBS ஸ்டுடென்ட்யிடம் பெற்றோராக கேட்கின்றேன்… MBBS வெறும் டிகிரி. நீ PG பண்ணினால் தான் பயன். அதுவரை நீ MBBS வச்சி என்ன பண்ண முடியும் ? டாக்டர் என்று போட்டுக் கொள்ளலாமே தவிர, வேறு எதுவுமே கிடையாது. ஏனென்றால் அடுத்தடுத்த நிலைக்கு நீங்கள் சென்று வெற்றி பெற வேண்டும். அங்கேயும் தடைகளை போட்டு போட்டு இழைக்கின்றது இந்த ஒன்றிய அரசு… குறிப்பாக பாரதிய ஜனதா அரசு… குறிப்பாக நரேந்திர மோடி.
அதை எதிர்த்து செயல்படும் தலைவர் யார் என்றால், தளபதி மு.க ஸ்டாலின். அவர் கொள்கையை எடுத்து செல்பவர் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின். இந்த பயணம் தொடரும். கண்டிப்பாக அடுத்த ஆண்டு வெற்றி பெறுவோம். தமிழ்நாட்டில் 40-க்கு 40 வெற்றி பெறுவோம். இந்தியா கூட்டணி இந்தியாவில் வெற்றி பெற்றால், கண்டிப்பாக நீட்டை அகற்றுவோம் என ஏன் சொல்லுகிறோம் என்றால்,
இந்த நீட் பிரச்சினை பற்றி ராகுல் காந்தி சொல்லுகிறார். அவர் நல்ல அழகா சொன்னாரு. நீட்டை பற்றி தமிழ்நாட்டில் எதிர்ப்பு குரல் கேட்கிறது. எதிர்ப்பு வருகிறது… வேண்டாம்… வேண்டாம்… என்று சொல்கிறார்கள்.. கேட்க மாட்டீர்களா ? ஏன் வேண்டாம் என கேட்டீர்களா ? உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பதவியேற்ற பிறகு டெல்லி சென்று முதல் முறையாக மோடியை பார்க்கிறார்…
பார்த்து நீட்டு விலக்கு வேண்டும் என கேட்கின்றார். மோடி பேச மாட்டேங்குறார். என்னைக்கு பேசி இருக்காரு மோடி ? பார்லிமென்ட்டில் பேசுனது இல்ல.. ஏன் வேண்டாம் என கேட்கணுமா ? இல்லையா ? இந்த எதிர்ப்பு குரலை கேட்பது தான் ஜனநாயகம். இந்தியா ஒரு ஜனநாயக நாடு என சொல்லுகிறார்கள்…. ஆனால் இந்தியா ஜனநாயகம் சுத்தமாக… குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் மோடி… மோடி…மோடி… மோடியை வீட்டுக்கு அனுப்பும் காலம் 2024இல். 50 லட்சம் கையெழுத்தை அனைவரும் சேர்ந்து அனுப்புவோம் என தெரிவித்தார்.