செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  இல்லம் தேடி கல்வி வந்துருது… அப்ப எங்க ஊர்ல இருக்கின்ற ஆரம்ப பள்ளிக்கூடங்கள் எல்லாம் மூடிடுவியா ? இல்லம் தேடி கல்வின்னா…  யாருடைய திண்ணையில் உக்கார்ந்து  பாடம் நடத்துவ ? என் வீட்டுத் திண்ணையில தாழ்த்தப்பட்டவன உட்கார விடுவனா ?

நான் தாழ்த்தப்பட்டவன்…  உங்க வீட்டு திண்ணையில் உக்காந்து பாடம் நடத்த விடுவீங்களா ? சரி அதுக்கு பாடத்திட்டம் என்ன ?  எத்தனை கேள்வி எழுப்புகிற… பாடத்திட்டம் என்ன ? இந்த பாட நடத்துற வாத்தியாருக்கு கல்வி தகுதி என்ன ?

TNPSC தலைவர் பதவிக்கு தமிழக அரசு முன்னாள் DGP சைலேந்திர பாபுவை நியமனம் செய்து, அதனை ஆளுநர் ஆர்.என் ரவி 2 முறை நிராகரிப்பது ஏற்புடையது அல்ல. ஒரு அரசு தீர்மானிச்சு… இவர்  இந்த பொறுப்புக்கு வரணும்னு ஒரு அரசு முடிவு பண்ணுதுன்னா…

கையெழுத்திடுவது தான் அவர் கடமை. ஆளுநர் ஆர்.என் ரவி தான்  தீர்மானிப்பது என்றால் ? 8 கோடி மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு அரசுக்கு இல்லாத அதிகாரமும்,  வலிமையும் ஒரு நியமன உறுப்பினருக்கு எப்படி வருது ? முதல்ல நீங்க யாரு ?

இத நிராகரிக்க நீங்க யாரு ? அதனால் அதை  மீறனும்… அத்து மீறனும்…  யோவ்.. போயா.. உன் கையெழுத்த தூக்கி குப்பையில் போடுய்யா… நீ வாயா… செயல்படும்னு சொன்னா ? என்னவாகுது ? என்ன பண்ணிடுவாரு ஆளுநர்? என ஆவேசமானர் .