விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வாக்குசாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், நான் ஏன் காங்கிரஸ்ஸை  ஆதரிக்கிறேன் ? இதை மட்டும் சொல்லி நான் முடிக்கிறேன்….  திருமாவளவன் காங்கிரசை ஆதரிக்கலாமா ? ஈழத் தமிழர்களுக்காக போராடியவர்.  ஈழத் தமிழர்களுக்கு எதிரான காங்கிரசை எப்படி ஆதரிக்கலாம் ? என பலபேர் கேள்வி எழுப்புறான்.

ஈழத் தமிழர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகளை போல…. திருமாவளவனை போல…. நேர்மையாக  உழைத்த கட்சி தமிழ்நாட்டில் வேறு எதுவும் இல்லை.  எந்த லாபமும் கருதாமல், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்…  குக்கிராமம்  வரை அண்ணன் பிரபாகரன் அவர்களை கொண்டு போய் சேர்த்த இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

முதன் முதலாக A9 road சாலை திறக்கப்பட்ட உடனேயே விடுதலைச் சிறுத்தைகளின் கலை இலக்கிய கழகம் நடத்திய ‘மானுடத்தின் தமிழ்க் கூடல்’ மாநாட்டில் பங்கேற்பதற்கு தமிழ்நாட்டில் இருந்து ஐந்து பேர் அழைக்கப்பட்டார்கள்.  அதிலே ஒரே ஒரு அரசியல் கட்சித் தலைவர் திருமாவளவன் மட்டும் தான். அண்ணன் பிரபாகரனால்  அழைக்கப்பட்டார்.

ஐந்து பேரில் திருமாவளவனை மட்டும் ஒருமுறைக்கு இரண்டு முறை தனியே வர வைத்து மணி கணக்கில் அமர வைத்து, கட்டி தழுவி… ஆர  தழுவி  கருத்துக்களை பகிர்ந்து கொண்ட தலைவன் அண்ணன் பிரபாகரன் அவர்கள்.  இன்றைக்கு பல பேர் ஈழம்  நடக்கிறபோது பிறக்காதவன்  எல்லாம் அள்ளு சில்லுகள் எல்லாம் அலப்பறை செய்கிறது

என்னுடைய கல்லூரி காலத்திலிருந்து நான் ஈழ பிரச்சினையில் தலையிட்டு போராடிக் கொண்டிருபவன். அவர் இந்திரா நகர் வீட்டிலே உண்ணாவிரதம் இருந்தபோது…  உண்ணாவிரதத்தை கைவிடுங்கள் என்று கோரிக்கை விடுத்து,  போர் குரல் கொடுத்த இளைஞர்களில் திருமாவளவன் ஒருவன். எங்களை கூப்பிட்டு எங்க முன்னால பேசுறாரு….  இந்த வரலாறு தெரியாத சில்லறைகள் இன்றைக்கு சத்தம் போட்டுக் கொண்டிருக்கின்றன என நாம் தமிழர் கட்சியை சீண்டினார்.