
கர்நாடகாவில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மையமும் மஞ்சள் அலர்ட் கொடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து கர்நாடகா அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் தனியார் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை பார்ப்பதற்கு நிறுவனங்கள் அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கனமழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நிலையில் இதுவரை மழைத்தொடர்பான வெவ்வேறு சம்பவங்களில் 5 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.