
அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, அற்புதமான பேச்சாளர் துயிலை நல்லச்சாமி. மிக மிக அற்புதமாக பேச்சாளர். தலைவருடைய கொள்கை பாட்டை பாடுனாரு பாரு யாத்தே… கேட்டுகிட்டே இருக்கலாம் போல.. இருக்கு. என்னம்மா…கேட்டுகிட்டே இருக்கலாம் போல இருசிச்சில்ல… சொல்லுங்க, ஆமா… இல்லை. ஆனால் விறுவிறுன்னு எக்ஸ்பிரஸ் வேகத்துல போறாரு.
அது என்ன புதுசா வந்திருக்கு எக்ஸ்பிரஸ்… ”வந்தே பாரத்” அந்த எக்ஸ்பிரஸ் வேகத்துல போறாரு. நிறுத்தி, நிதானமா…. அடிச்சாருன்னா…. சும்மா கோபாலபுரமே நடுங்கி இருக்கும்… கோபாலபுரம் கொள்ளை கூட்டமே நடுங்கி இருக்கும். அவர் ஒரு கருத்தை சொன்னார் பாருங்க … இந்த நாட்டுல மன்னர் ஆட்சியை ஒழித்தோம், கலைஞர் குடும்ப வாரிசு அரசியலை ஒழித்தோமா, ஒழிக்குறதுக்கு நல்ல சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு, அப்படின்னு அற்புதமா பேசினாரு…
பாராட்டணும், நல்லா கைதட்டுங்க. தலைமை கழக பேச்சாளர் என்றால் ? இப்படித்தான் இருக்கணும்.நாம கூட்டம் நடத்துறதே பெரும் பாடா இருக்கு. உங்களை உட்கார வச்சி நாங்க படுறப்பாடு இருக்கே… எங்க தெய்வமே நீங்க தான்.இந்த கழகத்தை வார்த்தெடுத்த தலைவர் காலத்திலிருந்து…. இந்தக் கட்சிக்கு அரணாக… துணையாக இருக்கிறது ஆண்களை காட்டிலும், பெண்கள் தான்.
நீங்க தான் எங்களுடைய தாய்மார்கள். எங்க அம்மா சொல்லுவாங்க…. எங்க தலைவர் சொல்வாங்க…. எங்க உயிரினும் மேலான தாய்மார்களே…. எங்க உயிரை காட்டிலும் நீங்க தான் எல்லாமே. உங்களையெல்லாம் உட்கார வச்சி, சந்தோஷமா அனுப்பனும்… உங்களை எல்லாம் உட்கார வச்சி சந்தோசமா அனுப்பனும். இப்போ பனி விழ போகுது. மழை வேற வர போகுது என தெரிவித்தார்.