இந்தியா மட்டும் இல்லாமல் உலகின் பல்வேறு பகுதிகளில் நவராத்திரி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் ஒன்பது நாட்களும் துர்கா தேவி மற்றும் அவரது ஒன்பது அவதாரங்களான நவ துர்கா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நவராத்திரி செப்டம்பர்- நவம்பர் மாதங்களில் வரும். இந்த ஆண்டு நவராத்திரி அக்டோபர் 15-ஆம் தேதி தொடங்கி 24-ஆம் தேதி தசரா கொண்டாட்டங்களுடன் நிறைவு பெறுகிறது. நவராத்திரி தினங்களில் துர்கா தேவியை பல்வேறு அவதாரங்களில் கண்டு ரசிக்கலாம்.

துர்கா தேவி மனித குலத்தின் நல்லனுக்காக பல்வேறு அவதாரங்களை எடுத்தார். நவராத்திரியின் போது துர்கா தேவியை வழிபட்டால் வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் நிறைந்து காணப்படும். இந்தியாவில் நவராத்திரி விழா கோலாலமாக கொண்டாடப்படுகிறது. ஒரு வருடத்தில் நான்கு நவராத்திரிகள் வரும். அதில் சைத்ர நவராத்திரி, மற்றொன்று ஷரதிய நவராத்திரி, இரண்டு குப்தா நவராத்திரிகள்.

நவராத்திரியின் போது ஒன்பது துர்க்கையின் 9 வடிவங்களும் வழிபடப்படுகிறது. இந்து நாள்காட்டியின் படி ஷரதிய நவராத்திரி இந்த ஆண்டு அக்டோபர் 15- ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 24-ஆம் தேதி முடிவு பெறுகிறது. நவராத்திரி சனி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் தொடங்கும் போது அம்மன் குதிரை வாகனத்தில் வளம் வருவார். துர்கா தேவியின் 9 அவதாரங்கள் பற்றி பார்ப்போம்.

அக்டோபர் 15-ஆம் தேதி மா சைலபுத்திரி வழிபாடும், அக்டோபர் 16-ஆம் தேதி பிரம்மச்சாரிணி வழிபாடும், அக்டோபர் 17-ஆம் தேதி மா சந்திரகாந்தா வழிபாடும், அக்டோபர் 18-ஆம் தேதி மா கூஸ்மாண்ட வழிபாடும், அக்டோபர் 19ஆம் தேதி மா ஸ்கந்த மாதா வழிபாடும், அக்டோபர் 20-ஆம் தேதி கார்த்தியாயினி வழிபாடும், அக்டோபர் 21-ஆம் தேதி மா காலராத்திரி வழிபாடும், அக்டோபர் 22ஆம் தேதி மா சித்திதாத்திரி வழிபாடும், அக்டோபர் 23-ஆம் தேதி மகாகவி வழிபாடும், அக்டோபர் 24 ஆம் தேதி விஜய தசமி கொண்டாட்டங்களுடன் நவராத்திரி நிறைவு பெறும்.