இஸ்ரேல் ஹமாஸ் இடையே 40 நாட்களைக் கடந்து போர் நீடித்து வருகிறது. கடந்த மாதம் 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் அத்துமீறி நுழைந்து தாக்குதலை மேற்கொண்டு ஏராளமானவரை கொன்று குவித்ததோடு 200க்கும் மேற்பட்டோரை பணைய கைதிகளாகவும் பிடித்து சென்றனர்.

அவர்களை மீட்கும் பொருட்டு இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தி இன்று வரை போர் நீடித்து வருகிறது. இதனால் இரண்டு தரப்பினருக்கும் ஏராளமான இழப்புகள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக காசா பகுதியில் உள்ள மருத்துவமனைகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. அதேபோன்று இஸ்ரேலிலும் சில மருத்துவமனைகள் தாக்குதலுக்குட்பட்டு உள்ளது.

இதனிடையே 4 நாள் போர் இடை நிறுத்தத்திற்கு இஸ்ரேல் முன்வந்துள்ளது. இந்நிலையில் உலக பணக்காரரான எலான் மஸ்க், X வலைதளத்தில் விளம்பரத்தின் மூலமாகவும் சந்தாதாரர்கள் மூலமாகவும் கிடைக்க பெரும் வருமானம் போரில் சேதமடைந்த மருத்துவமனைகளை சரி செய்யவும் காசாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நன்கொடையாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.